என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓட்டல் உரிமையாளர்"
சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (47). இவர் சந்தவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார்.
ஓட்டலில் வியாபாரம் சரியாக இல்லாததால் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். கடன் தொல்லை தாங்காமல் ராஜேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். #tamilnews
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ்நிறுத்தம் பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் சந்திரசேகர் (வயது 49).
இவர் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு கடை வைத்து நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த விஷத்தை (எலி மருந்து) எடுத்து சந்திரசேகர் குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்து உயிருக்காக போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து உத்தரகாண்டின் ஹரித்வாருக்கு புனித யாத்திரை சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது அவர்களது கையில் இருந்த பணம் தீர்ந்தது.
எனவே உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணத்துக்காக சிறுசிறு பணிகளை செய்து கொடுத்தனர். அப்போது அந்த குழுவில் இருந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கு ஓட்டல் உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார் செய்தான். அதன்படி ‘போக்சோ’ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
முசாபர்நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 16 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 22 வயது வாலிபர் ஒருவரை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது43), இவர் நைனார்மண்டபம்- கடலூர் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது ஓட்டலுக்கு முதலியார்பேட்டையை சேர்ந்த வாலிபர் சுத்திமணி என்பவர் சாப்பிட வந்தார். அப்போது அவர் ஓட்டலின் சமையல் கூடத்துக்கு சென்றார். இதற்கு புஷ்பராஜ் எதிர்ப்பு தெரிவித்து சுத்திமணியை சமையல் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது சுத்திமணி செல்பானில் பேசி நைனார்மண்டபத்தை சேர்ந்த தனது நண்பர்களான ஆனந்து, எழில், எலி ஆகியோரை வரவழைத்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் புஷ்பராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அவர்கள் 4 பேரும் சென்று விட்டனர்.
இதையடுத்து புஷ்பராஜ் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவிசப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுத்திமணி உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்கள். ஓட்டலை சூறையாடிய சுத்திமணி மீது முதலியார்பேட்டை போலீசில் ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம் அருகே உள்ள சின்னஉலகாணியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மாரியப்பன் (வயது 30). மதுரை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணி புரிந்து வருகிறார்.
நேற்று மாலை இவர், கல்லணை விலக்கில் பாலன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவர், மது போதையில் இருந்ததாக தெரிகிறது.
அதே ஓட்டலில் சின்னஉலகாணியை சேர்ந்த பாலு, செந்தில் ஆகியோரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களும் மது போதையில் இருந்துள்ளனர்.
3 பேருக்கும் ஆம்லெட் சப்ளை செய்வதில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் மாரியப்பன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்து பாலன் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ்காரர் மாரியப்பன், பாலு, செந்தில் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர் பாலனை தாக்கியதில் ஆத்திரம் அடைந்த அவரது மைத்துனர் முருகன் என்பவர், போலீஸ்காரர் மாரியப்பனை இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் போலீஸ்காரரின் மண்டை உடைந்தது. அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரிலும் கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்